பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
07:04
குளித்தலை: குளித்தலை, பேராளகுந்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி திரு வீதி உலா நடந்தது. குளித்தலை, குந்தாளம்மன் கோவில் திருவிழா, கடந்த மார்ச், 31ல் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி, கடந்த, 4ல் பூச்சொரிதல் விழா நடந்தது. கடம்பன் துறை காவிரி ஆற்றிலிருந்து, பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு நேரங்களில், கோவிலிலிருந்து புறப்பட்ட சக்கரத்தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மேலும், ஓலை பிடாரி அம்மன் வீதி உலா நடந்தது. அம்மன் சென்ற வீதிகளில், இளநீர் கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோட்டைமேடு, மயிலாடி, குட்டப்பட்டி, புதுப்பாளையம், அய்யனேரி, வை.புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, அம்மன் கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியுடன், அம்மன் குடிபுகும் திருவிழா முடிவடைகிறது. ஆயிரக்கணக்கானோர் அம்மன் அருள் பெற்று சென்றனர்.