Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் மேஷம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... மிதுனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் மிதுனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை)
ரிஷபம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
23:36

கார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும்.


குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள்.. உங்களுடைய ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் நிறையப் பண வரவு இருக்கும். கடன் பிரச்சினையை சமாளிப்பீர்கள். கல்யாண விவகாரங்களை அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். ஒவ்வொரு செயலையும் நிதானமாக செய்வது அவசியம். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும்


நிதி:

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கியில் லோன் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பகுதி பகுதியாக அடைக்க முற்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்துகள் வாங்கும் முயற்சியில் துரிதமான முன்னேற்றம் இருப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும்.


குடும்பம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் சந்தோஷமும் நிலைத்திருக்கும். குடும்பத்தினர் உங்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட கல்யாணம், கிரக பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் நடக்கும்.


கல்வி:

இயல்பாகவே மேலும் மேலும் கற்கும் ஆர்வம் உங்களைக் காக்கும். மதிப்பெண்ணுக்காகக் கற்பதுடன் வாழ்க்கையில் முன்னேறவும் கற்பீர்கள். ஆசிரியர்களுக்கு உகந்த மாணவராக இருப்பீர்கள். எதை முயன்றாலும் அதில் வல்லமை வரும். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்களின் விருப்பம் போலவே அது அமையும்.


பெண்கள்:

திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.


உடல் நிலை:

குரு பார்வை ராசிக்கு இருக்கையில் என்ன குறை? உடல் நலத்தை நன்கு பேணுபவர்களுக்கு இன்னும் அதிக ஆரோக்யம் இருக்கும். ராகு கேது காரணமாக சிறு சருமப் பிரச்னைகள் வரக்கூடும். ஆனால் அவை நிரந்தரமல்ல. ஆரோக்யமான உணவை சுகாதாரமான இடத்தில் சாப்பிடுங்கள். கையேந்தி பவனைத் தவிர்க்க வேண்டும்.


தொழில்/பணி:

பணியாளர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். முதலீட்டை அதிகரிப்பதில் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரம் இது. பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடன் பகை ஏற்படாமல் கவனமாக இருங்கள். பக்கத்தில் பணிபுரிபவர்களுடன் அதிக இணக்கம் வரும். . ‘வேலை போய்விடுமோ’ என்ற வீண் கவலையைத் தூக்கி எறிங்கள்.


பரிகாரம்:
சிவனைத் துதித்தால் சிரமத்திலிருந்து விடுபடுவீர்கள்.
பாடல்:
பொன்னார் மேனியனே  புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்   மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே   மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்  இனியாரை நினைக்கேனே.

ரோகிணி: இனி தடை  இல்லை


பொதுவாக இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்து அலைமோதும். கொடுக்கல் -வாங்கல்களில் திருப்தி ஏற்படும். குரு பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். தாய் மற்றும் சகோதரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். குழந்தைகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும்.


நிதி:

வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் தேவையற்ற பொருள் இழப்புகளைத் தவிர்க்கலாம்.


குடும்பம்:

வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் வழியில் தொழில் தொடங்கும் முயற்சி ஒரு சிலருக்கு கைகூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.


கல்வி:

சென்ற ஆண்டு மேல் படிப்பில் தடைகள் வந்துகொண்டிருந்தன. இனி அவை இல்லை. நீங்கள் கேட்ட துறையில் சீட் கிடைக்காத நிலை மாறும். வெளிநாட்டில் முயற்சி செய்த கல்வி இந்த ஆண்டு சாத்தியமாகும். கல்வி விஷயத்தில் சோம்பல் வேண்டாம். முயற்சிகளை முனைந்து துரிதப்படுத்துங்கள்.  மருத்துவம் படிக்க விழைபவர்களுக்கு இந்த ஆண்டு விருப்பப்படி கல்வி அமையும். பட்ட மேல் படிப்புக்குச் செய்த முயற்சிகள் பல காலத்துக்குப் பிறகு அமையும். ஆராய்ச்சிப் படிப்பை முடிப்பீர்கள்.


பெண்கள்:

சகோதரர்களுடன் சுமுகமான போக்கைப் பின்பற்றுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பதன் மூலம் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்திலும் மிகமிக கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம்.


உடல் நிலை:

கண் சம்பந்தமான விஷயங்களில் அதிகக் கவனம் தேவை. அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட வேண்டாம். சரும பிரச்னைகளை உடனுக்குடன் கவனித்துவிடுவது நல்லது. அலைச்சலைக் குறைத்துக்கொண்டால் உடல் நிலை பற்றிய கவலை  இல்லை. சரியான நேரத்துக்குச் சாப்பிட்டுச் சரியான நேரத்துக்குத் தூங்குங்கள்.


தொழில்/பணி:
பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியில் முன்னேற்றத்தைப் பெற விரும்புபவர்கள் வேலைக்கேற்ற தொரு கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வதும் அல்லது உயர் படிப்பு படிப்பது சிறந்தது. துறை சம்பந்தமான உங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ளுங்கள். மேலதிகாரியிடமிருந்து ஆர்வத்துடன் நிறையக் கற்பீர்கள். சிறு தடை தாமதங்கள் இருந்தாலும் அடுத்த நிலைக்கு உயர்வீர்கள். மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியில் உள்ளவர்கள் பேச்சைக்கொண்டு முன்னேறுவீர்கள்.

பரிகாரம்:
அபிராமியை வணங்கி அனைத்து நலன்களும் பெறுங்கள்.
பாடல்:
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

மிருகசீரிடம் 1,2 ம் பாதம்: சுபமான மங்கள விழாக்கள் நடைபெறும்

உறவோடும், நட்போடும் கலகலப்பான உறவு நிலவும். குடும்பத்தில் கடன் தொல்லைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வீடு சம்பந்தமான வேலைப்பளு அதிகரித்தாலும் அதை உற்சாகமாகச் செய்வீர்கள்.. கட்டுமானம் சம்பந்தமாகத் தள்ளி வைத்த வேலையை, உடனே முடிக்க வேண்டியதிருக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமண வயதில் திருமணத்திற்க்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடி வரும்.


நிதி:

குடும்பத்தில் சுபமான மங்கள விழாக்கள் நடைபெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்றவாறு கௌரவமான வேலையும், பதவியில் இருப்போர்க்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்க்கு பதவி உயர்வுடன் இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம்.


குடும்பம்:
உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டுக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். திருமணம் அல்லது குழந்தைப் பேறுமூலம் குடும்பத்தில் ஒருவர் அதிகரித்து குதூகலத்தை அதிகரிப்பார். பல காலம் காத்திருந்த நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நிறைவேறும். தந்தையின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும். அனைவரும் சேர்ந்து இன்பச் சுற்றுலா செல்வீர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை காரணமாக ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பயன் பெறுவீர்கள். குழந்தைகளால் பெருமிதம் வரும்.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. பல்வேறு வகையில் உங்களுக்கு கவன சிதறல் ஏற்படும். எனினும் அதைத் தாண்டி, சோம்பேறித்தனத்தை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த நிறைய முயற்சிப்பீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்குத் துணைபுரிவார்கள். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு இருக்கும். நீங்கள் நினைத்த இலக்கை அடைவீர்கள்.  உங்களால் முன்னேற முடியாதோ என்ற வீண் பயம் இருந்துகொண்டிருக்கும். அது இனி வேண்டாம். நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.


பெண்கள்:

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பும் தொடங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். பாதியிலேயே நின்ற வீடு கட்டும் பணி தொடங்கி இனிதே முடியும்


உடல் நிலை:

தேவையற்ற ஆபத்தான சுற்றுப்பயணங்கள் மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தியானம் மற்றும் லேசான உடல் பயிற்சிகளும் அவசியம். உணவு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். உணவுதான் உடல்நிலைக்கு அவசியம் என்பதை உணருங்கள்.  குறித்த நேரத்தில் சாப்பிடுவதும் நேரம் தப்பாமல் தூங்குவதும் முக்கியம் என்பதை நினைவில் கொண்டால் போதும்.


தொழில்/பணி:

தொழில் மற்றும் பணி பற்றிய உங்கள் செயல்பாடு நேர்மறையாக இருக்கும். அனைத்து விஷயங்களும் உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். சிலருக்குச்  சம்பள உயர்வு, பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பணியில் உங்களுக்கான வேலையை சரியான நேரத்தில்  முடிக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். . பணியில் நீங்கள் செலுத்தும் ஈடுபாடு உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அது எதிர்கால நன்மைக்கும் வழிவகுக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை அவசரப்படாமல் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.


பரிகாரம்:
திருமகள் வழிபாடு நன்மை தரும்.
பாடல்:
பெட்டி  நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா
கொட்டகை நிறைய பசு மாடு தாரும் அம்மா
புகழுடம்பை தந்து  எந்தன் பக்கத்தில்  நில்லும்  அம்மா
அகதழிவை  தந்து எந்தன் அகத்தினிலே வாழும் அம்மா

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை) »
temple
அசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக ... மேலும்
 
temple
மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்
 
temple
புனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக ... மேலும்
 
temple
மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்
 
temple
உத்திரம்,2,3,4 ம் பாதம்: சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள்பொதுவாக குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.