Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: கடன் வாங்கினாலும் கனவெல்லாம் நனவாகும் மீனம்: கடன் வாங்கினாலும் கனவெல்லாம் ... ரிஷபம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் ரிஷபம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை)
மேஷம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
23:33

அசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும்.


பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலத்தில் சற்றுக் கவனம் தேவை. உறவினர் மற்றும் நண்பர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.


நிதி:

வருமானம் நாலா பக்கத்திலிருந்தும் வந்து குவியும். அடகிலிருந்த நகைகளை மீட்கும் அளவிற்கு வருமானம் உயரும். புது ரக ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். அரசாங்க நெருக்கடிகள், காவல்துறையின் கண்காணிப்புகள், நீதிமன்ற சம்மன்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதால் நிதி நிலைமை மேம்படும். குருபார்வை காரணமாக வங்கியில் சேமிப்பு உயரும். வருமானம் நிறைய அதிகரிக்கும்.  செலவுகள் சிறிதளவு இருக்கும்.


குடும்பம்:

மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வேலை வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். அம்மாவுடன் கருத்து மோதல்கள் வந்தாலும், நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வீர்கள். ஜூன் முதல் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். செலவுகளைச் சமாளிப்பீர்கள். சொந்த பந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீர்கள். சிறுசிறு சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். கண்டுகொள்ளாமல் உங்கள் கம்பீரத்தைக் கைக்கொண்டு முன்னேறுங்கள். வழக்கமான பொறுமை கைகொடுக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாக நான்கு இடங்களுக்குப் போவீர்கள்.


கல்வி:

வெற்றி பெற சற்று அதிகமாக உழைத்தால் போதும். வெளிநாடு போக ஆசைப்பட்டவர்களுக்கு இது நல்ல ஆண்டாக அமையும். புது விஷயங்களைக் கற்க ஆர்வம் வந்து அதிலும் மின்னுவீர்கள். அலட்சியம் மற்றும் கவனச் சிதறல் கூடாது என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டால் போதும். உங்கள் திட்டங்களுக்கு வீட்டில் உள்ளோரின் ஆதரவு இருக்கும்.


பெண்கள்:

பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருந்த உங்களுக்கு இது மிகவும் நன்மைதரும் ஆண்டாக அமையும். மனதிலிருந்த சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். விட்டு போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.


உடல் நிலை:

கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து சிரமப்படுத்தும் என்றாலும்கூட இவையெல்லாம் எப்போதாவது ஒரு முறை வந்து சிறிது காலத்திலேயே சரியாகிவிடும். எனவே இதை அதிகம் யோசித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். அக்கறையுடன் ஆரோக்யத்தைப் பார்த்துக்கொள்பவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.


தொழில்/பணி:

ராகு இரண்டாம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றன. குரு சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். வேலையில் சின்னச்சின்ன குடைச்சல்கள் இருந்தாலும் சமாளித்து வேலையை தொடர்ப்பாருங்கள். புதிய வேலை மாற நினைக்கக் கூடாது. தொழில் முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்ய நினைக்க வேண்டாம். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நிறைய நன்மைக நடைபெறும். சோம்பல் இல்லாமல் அன்றைய வேலையை அன்றைக்கே முடிக்கும் திறன் வரும். எனவே பாராட்டுக்கிடைக்கும்.


பரிகாரம்:
சனிக்கிழமைகளில் அனுமார் வழிபாட்டுப்பாடல்கள் சொல்லாம்.
பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் 

பரணி : உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும்


பொதுவாக  இந்த ஆண்டு மிகவும் உற்சாகமாகம், தைரியம்காரணமாகப் பல மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பல பல வேலைகளை நீங்கள் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் உங்களை அதிகமாக உழைக்க செய்வார். அதற்கேற்ற வருமானம் இருக்கும் என்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.


நிதி:

பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும், இது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அதைத் திறம்பட சமாளிப்பீர்கள். .பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க நகைகள், விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன் கிடைக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.


குடும்பம்:

குடும்பத்துடன் கோயில்களுக்குக் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். சில காரணங்களால் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். வீட்டிலிருந்து விலகி இருக்கும்போது, நீங்கள் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நன்கு பெறுவீரகள். அவர்களுடன் நன்கு தொடர்பில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள்நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு நேரம் கொடுப்பீர்கள் என்பதால் சுமுக உறவு இருக்கும்.


கல்வி:

ராசிக்கு 9ஆம் அதிபதி 10ல் அமர்ந்துள்ளதால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். 10ஆம் வீட்டில் சனி பகவான் ‘ அமர்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும். அரசு வேலை வாய்ப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனமாக படிக்க வேண்டும். ராசிக்கு அதிபதியான செவ்வாயினால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வருட மத்தியில் திடீர் உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்பட்டு ஜமாய்ப்பீர்கள்.அது தொடரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.


பெண்கள்:

சென்ற சில ஆண்டுகளாக இருந்து வந்த மனக் குறைகள் விலகும். கலைத்துறையில் அதிக ஈடுபாடு வரும். வேலைப் பகுதியிலும் ஏராளமான வேலைகள் இருக்கும். அனைத்தையும் புன்னகையுடன் சமாளிப்பீர்கள். ஆனால் ஆரோக்யத்தில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் முன்னேறும் வழிமுறைகளை யோசித்துச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.


உடல் நிலை:

குரு பகவானும் சனியும் இணைந்திருப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் கவனமாக இருங்கள். நிறையத் தண்ணீர் குடித்தால் போதும். உஷ்ணம் காரணமாக பிரச்னைகள் வராது. செவ்வாய் உங்கள் ராசிநாதன் என்பதால் கோபத்தில் உரக்கக் கத்துபவர்களுக்கு மட்டுமே ஆரோக்யம் பாதிக்கப்படும் என் நினைவில் வைத்துக்கொண்டால்  போதும்.


தொழில்/பணி:

நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். அநாவசியப் பேச்சைத் தவிர்த்து விட்டு வேலையில் கவனம் செலுத்துங்கள். எதையுமே நன்கு யோசித்துச் செய்தால் போதும். பெரிய தீர்மானங்கள் எடுக்குமுன் உங்களுக்கு நன்மை நினைக்கும் அனுபவசாலிகளிடம் ஆலோசனை  கேட்டுச் செய்தால் ஜெயித்துவிடுவீர்கள்.  பணியிடத்தில் நிறைய உழைப்பீர்கள். ஆனால் அதை உற்சாகமாய்ச் செய்வீர்கள். 


பரிகாரம்:
முருகரை வணங்கிப் பாடல்கள் சொன்னால் சிரமம் ஏதும் இருக்காது.
பாடல்:
‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

கார்த்திகை 1ம் பாதம் : ஏற்றமும், மாற்றமும் தேடிவரும்.


பொதுவாகப் பொருளாதார முன்னேற்றம் உண்டு. செய்து வரும் தொழிலில் நல்ல லாபம், உத்யோகத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து, உயர்வு ஏற்படும். உண்மையான செயல்பாட்டிற்கும் கடினமான உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். புதிய தொழில் முயற்சி நல்ல பலனை தரும். தந்தை வழி சொத்துக்களில் பலன் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படாமல் இருக்க அவர்களை அனுசரித்து செல்லவும். இது நாள் வரையில் ஏற்பட்டு வந்த தடைகள் அகலும்.


நிதி:

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். பழைய கடன் பிரச்சனைளில் நல்ல தீர்வுகாண்பீர்கள். வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். அதற்காக ஒரேயடியாய் பயந்துவிடாதீர்கள். ஓரிரு மாதங்கள் இப்படி இருந்தால் அடுத்த நான்கு மாதங்கள் அருமையாக இருக்கும்தான். எதிர்காலத்துக்காக நீங்கள் திட்டிய தீட்டங்கள் நலல முறையில் முன்னேற்றம் காணும்.  சம்பளம் உயரும். வாழ்க்கைத் துணையின் வருமானம் அதிகரிக்கும். கூடுதல் வருமானத்துக்கு வழி கண்டுபிடிப்பீர்கள்.


குடும்பம்:

பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் உயர்கல்வி, வேலை திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். இளைஞர்களுக்குச் சிறந்த எதிர்காலம் இந்த ஆண்டு தீர்மானிக்கப்படும். குடும்ப வருமானம் உயரும்.  துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்து வீர்கள். மன உபாதைகள் விலகும். புதிய எண்ணங்கள் தோன்றும். அண்டை வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலத் தீர்மானம் சந்தோஷம் தரும்.


கல்வி:

மனதில் நினைத்த விஷயங்களை, உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். முறையான வழைமுறைகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த வருடம் ஏற்றமும், மாற்றமும் உங்களைத் தேடிவரும். மேல்படிப்பு பற்றித் திட்டமிடும்போது நன்கு யோசித்து முடிவெடுப்பது அவசியம். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக ஏதோ ஒரு கோர்ஸை எடுக்க வேண்டாம். உங்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.


பெண்கள்:

உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.


உடல் நிலை:

உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பவர் நீங்கள். உடற் பயிற்சியும் வழக்கம்போலத் தொடர்ந்தால் ஆரோக்யத்தில் உங்களை மிஞ்ச யார் இருக்கிறார்கள்? போன ஆண்டு இருந்த அஷ்டமச் சனி தொல்லைகள்கூட இப்போது இல்லாததால் மனதிலும் உடலிலும் உற்சாகம் பொங்கும். நிறையத் தண்ணீர் குடிப்பவர் என்றால் சிறுநீரகப் பிரச்னைகள் இருக்காது. 


தொழில்/பணி:
பொதுவாக முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.அனைவராலும் மதிக்கப்படுவீர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத் தைப் பெருக்குவீர்கள். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி யாகும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.புதிய பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும். சற்று அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறதே என்ற சலிப்பு வேண்டாம். பலன் நன்றாக இருக்கும்.    
            
பரிகாரம்:
அபிராமியை வணங்கி நன்மை பெறுங்கள்.
பாடல்:
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை) »
temple
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும். குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்
 
temple
புனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக ... மேலும்
 
temple
மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்
 
temple
உத்திரம்,2,3,4 ம் பாதம்: சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள்பொதுவாக குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.