திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயில் உள்ளது. இங்குள்ள பட்டாபிஷேக ராமருக்கு சித்திரை திருவிழா என்னும் சைத்ரோத்ஸவ விழா விமர்சையாக நடப்பது வழக்கம். வருகிற ஏப்., 16ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா நடக்கவிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் விழாவின்போது நடக்கும் பூஜைகள் ஆகம விதிப்படி, அரசு விதித்த கட்டுப்பாடுகளின் படி பக்தர்கள் இன்றி பூஜைகள் நடக்கவுள்ளது. உத்தரகோசமங்கையிலும் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சனிடைசர் பயன்படுத்தி, குறைந்த எண்ணிக்கையிலேயே தரிசனம் செய்து வருகின்றனர்.