புதுச்சேரி : முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசையையொட்டி நேற்றிரவு தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டிகளை ஏந்தி கோவிலை வலம் வந்து மகா தீபம் ஏற்றினர். முருங்கப்பாக்கம், நைனார் மண்டபம் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.