Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... தனுசு: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் தனுசு: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
விருச்சிகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
11:04

விசாகம்,4 ம் பாதம்: சேமிப்பில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
இத்தனை காலம் முன்னேற்றத்துக்கு நிலவி வந்த தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  உடல் நலம் நிம்மதி அளிக்கும்.  திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஆலயத்  திருப்பணியில் சிறு பங்களிப்பு செய்வீர்கள்.
நிதி:
உபரி வேலைகளிலும் ஈடுபட்டு வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் மிக உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.வெளிநாட்டுப் பணம் வரும். தடைகள் ஏற்பட்டுப் பிறகே நிதி விஷயங்கள் சுலபமாக முடியும் தங்கத்தை வாங்கி அந்த வகையில் சேமிப்பீர்கள்.  ஷேர் மார்க்கெட்டில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம். சூதாட்டம் அறவே கூடாது.
குடும்பம்:
தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தராதபடி அதைப் புதுப்பிப்பீர்கள். இதனால் குடும்பத்தோடு குதூகலமாக வெளியில் போய் அவர்களை சந்தோஷப்படுத்தி நீங்களும் மகிழ்வீர்கள்.
கல்வி:
சற்று அதிகம் உழைத்தே எதையும் சாதிக்க முடியும். ஆனால் சாதனை இனிக்கும். எதையும் முனைந்து கற்று மனதில் ஏற்றிக்கொள்வீர்கள். வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். கவனச்சிதறல் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு பொற்காலம்.
பெண்கள்:
குடும்பத்தில் நிலவி வரும் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவர் மிகுந்த உதவியாய் இருப்பார். ஆயினும் அவ்வப்போது அவருடன் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம். பிள்ளைகளுக்காக சேமிப்பில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
உடல் நிலை:
மன அமைதியும் ஆரோக்ய உணவும் உடல் நலத்தை நன்கு பேண உதவும் என்பதை மறக்க வேண்டாம் பணிச்சுமை காரணமாக அதிகம் உழைக்க வேண்டி வந்து அதனால் ஆரோக்யம் கெடாமல் பார்த்துககொள்ளுங்கள்.
தொழில்/பணி:
ஆண்டின் முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பார்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் திருமகள் துதி செல்லி வணங்குங்கள்.

அனுஷம்: தேவைக்குமேல் பணம் வரும்.
உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப் பூர்வமாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள். தடைபட்ட பல விஷயங்களை முடித்துக்காட்டி வியக்கச் செய்வீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள்,நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்
நிதி:
எதிர்பார்த்த வகையில், தேவைக்குமேல் பணம் வரும். இத்தனை காலம் வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். உங்களுக்கென்று தனியானதொரு சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் எண்ணம் வரும். அதை ஆரம்பிப்பீர்கள். எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என்று குடும்பத்தினரோடு கலந்து பேசி முடிவெடுப்பீர்கள்.
குடும்பம்:
கணவன் மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். உங்களின் பொறுப்பான செயல்களினால் குடும்பத்து பெரியவர்களிடம் நற்பெயரினை அடைவீர்கள்.
கல்வி:
வெற்றி பெறும் வழிகளை ஆராய்ந்து அவற்றைக் குறித்துக்கொண்டு அதன்படி செயல்படுவீர்கள். படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
பெண்கள்
எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப ஒற்றுமையைப் பேணுங்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கூடுதலாகும்.  
உடல் நிலை:
உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். இதனால் மேலும் நலமடைவீர்கள். மாற்று மருத்துவத்தின்மீது நாட்டம் வரும். மருந்துகள் உட்கொள்ளாமல் ஆரோக்யமான வழிகளிலேயே நன்மையடைவீர்கள்.  
தொழில்/பணி:
சம்பள பாக்கியை போராடாமலேயே பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் அனேகமாக உடனடியாய்க் கிடைக்கும். கணினி துறையினர்களே! புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.. பணியாளர்களுக்கு திடீர் நன்மை ஒன்று உண்டு.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் ஆறுமுகனை வணங்கி நன்மையடையுங்கள்.

கேட்டை: முயற்சிகளில் வெற்றி உண்டு

மனஇறுக்கங்கள் மெல்லக்குறைந்து பிறகு, நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் மூலம் நீங்கள் விரும்பிய செயலை முடிப்பீர்கள். மகனுக்கு இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். நீங்கள் ஏங்கிய நன்மைகள் கைகூடும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாதபடி வேலை பளு அழுத்தும்.  
நிதி:
எவ்வளவுதான் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மோசமாக நிலை கிடையாது. வெளிநாட்டு விவகாரங்களில் நிலவி வந்த டென்ஷன்கள் தீரும். நிதி பற்றிய திட்டங்கள் நிறைவேறும்.  வேறு பணிக்கு மாறுவதன் மூலம் சம்பளம் அதிகரிக்கும். கடன் கேட்ட இடத்தில் கிடைக்கும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்துப் பிறகு செய்யலாம்.     
குடும்பம்:
அக்கம்பக்கத்து வீட்டு பிரச்னைகளைத் தீர்த்து சுமுகமான பஞ்சாயத்து செய்வதால் உங்களைப் பலருக்குப் பிடிக்கும். உறவினருடனும் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட அவகாசம் கிடைக்காது. குடும்ப நபர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள்.
கல்வி:
மாணவர்கள் கல்வி நிலையில் ஏற்றம் பெறும் வருடம் இது. கடந்த காலத்தில் உண்டான ஞாபக மறதி காணாமல் போவதோடு நினைவாற்றலும் கூடும். பாடத்தினை நிதானமாக உள்வாங்கி படித்து  வெற்றி பெற்று மகிழ்வீர்கள். ஆசிரியர் பெருமிதம் அடைவார்.

பெண்கள்:
பொழுதுபோக சுற்றுலா சென்று வருவீர்கள்.எண்ணங்கள் புதுமைகளாக மலரும்.குடத்தில் இட்ட விளக்காக செயலாற்றி வந்தவர்கள் இந்த ஆண்டு பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும்.
உடல் நிலை:
கடந்த ஆண்டைவிட மேம்படும்.  ஆரோக்யத்தில் நல்ல முறையில் கவனம் செலுத்துகிறீர்கள்தான். நேரத்துக்குச் சாப்பிடவும் தூங்கவும் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் பிரச்னை இருக்காது.
தொழில்/பணி:
கடந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறி சூடுபிடிக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.  துவக்கம் உங்களுக்கு சுமாராக இருக்கிறது என்றாலும் போகப்போக நல்ல முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். சோதனைகளை எல்லாம் உங்கள் சாதுர்யத்தாலும் யுக்தியாலும் சாதனைகளாக மாற்றிக்கொள்வீர்கள்.  
பரிகாரம்:
விநாயகரையும் அம்பாளையும் விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar