Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ ... மகரம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் மகரம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
தனுசு: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
11:04

மூலம்: ‘நிதி நிலைமை மேம்படும்.
பொதுவாக முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரை குறையாக நின்ற பணிகளை அவசரமாக முடிப்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த விஷயத்தை முடிக்கும் மன உறுதி பிறக்கும். தன்னம்பிக்கை கூடும். முன்னேற்றத்துக்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.
நிதி:
ஓரளவே பணவரவு இருக்கும் என்றாலும், கடன் வாங்காத அளவுக்கு வரவு இருக்கும். தொழில் புரிபவர்கள் படிப்படியாக முன்னேறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி சம்பந்தப்பட்ட திடீர் பயணம் உண்டாகும். அது வெற்றிகரமாக முடிவதால் நிதி நிலை மேம்படும்.
குடும்பம்:
வாக்குவாதத்தால் தொல்லைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் இதுவரை இருந்த தடை அகலும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். யாரேனும் ஒருவர், வெளியூர் வெளிநாடு என்று செல்வர்.
கல்வி:
தேர்வுகள் நடைபெற உள்ள மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிரஹ நிலை சாதகமாக உள்ளதால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள் உங்கள் தாய் தந்தையரையும் ஆசிரியரையும் மகிழ்விப்பீர்கள்.
பெண்கள்:
இத்தனை நாளும் தேவையற்ற பயத்துடன் ஒதுங்கிய இடத்தை தைரியமாக எதிர்கொள்வதால் எதிரிகள் காணாமல் போவார்கள். உடன்பிறப்புகளின் ஒற்றுமை பலப்படும்.
உடல் நிலை:
அலைச்சல் காரணமாக ஓய்ச்சல் மற்றும் களைப்பு ஏற்படலாம். வாகனங்களை  மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். உஷ்ணம் சம்பந்தமான வெளிப்பாடுகள் இருக்கும். மூக்குக் கண்ணாடி பவர் மாறும்.
தொழில்/பணி:
பணியில் சில மாதங்கள் இடைவெளி ஏற்பட்டிருந்தவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு வரும். பொறுப்பாக செயல்பட்டு நன்மையடைவீர்கள். . பணி மற்றும் வியாபார இடத்தில், விட்டுக் கொடுத்து போவது நல்லது. பங்குதாரர்களால் வந்த விரயம் தீரும்.
பரிகாரம்:
கிருத்திகை நாட்களில் முருகரை வணங்கி நன்மையடையுங்கள்.

பூராடம்: விடிவு காலம் பிறக்கும்.
வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிப்பதுபோல் தோன்றும். பெரிய அளவில் ஏதோ நோய் இருப்பதைப் போன்ற பிரமையும் தேவையற்ற பயமும் வந்து நீங்கும். எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும். பயந்த விஷயங்கள் பயமுறுத்தாமல் விலகிவிடும்.
நிதி:
என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது பலமடங்கு விலை உயரும். மிகுந்த முயற்சிக்குப் பிறகுதான் எந்த முன்னேற்றமும் படிப்படியாக இருக்கும். நிதி மேம்பாட்டுக்கு எந்த விதக் குறுக்கு வழியையும் கையாள வேண்டாம். நிதி மேம்பாடு வெண்டுமென்றால் நன்கு உழைக்கத் தயாராகுங்கள். எதிர்பார்த்த லோன் பணம் கைக்கு வரும்            
குடும்பம்:
குடும்ப விஷயங்கள், சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களை ரகசியமாக வைப்பது உத்தமம். சந்திரன், சூரியன் நட்சத்திரத்தில் சனி செல்வதால் மகன் திருமண  விஷயமாக திடீர் சுப முடிவுகள் வரும். நெருங்கிய சொந்தத்திலேயே பெண் அமையும் அதனால் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள்.
கல்வி:
மாணவர்கள் தீய நண்பர்களின் சேர்க்கையை விலக்கி, படிப்பில் கவனம் செலுத்துவது நலம் தரும்.. சொத்து வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் நல்ல அனுபவமிக்க வழக்கறிஞரை கலந்து ஆலோசித்து செய்யவும்.
பெண்கள்:
மிக மிக முக்கியமான மாற்றங்கள் உண்டாகும். பிரிந்திருந்த கணவர், மனைவி  ஒன்று சேருவார்கள். அடிப்படை வசதிகள் பெருகும். எதையும் சவாலாக எதிர்கொண்டு  செய்து முடிப்பீர்கள்.
உடல் நிலை:
வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி இன்பெக்‌ஷன் வந்துச் செல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. மின்சார சம்பந்தமான வேலை  செய்பவர்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது.
தொழில்/பணி:
ரியல் எஸ்டேட், கமிஷன், எண்ணெய், மண்டிகள் மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் எல்லாம் நிறைய முயற்சிக்குப் பின் கூடிவரும். பணி இட மாற்றம் அதிக முயற்சியால் வரும்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளையும் சனீஸ்வரரையும் வழிபடுங்கள்.

உத்திராடம்,1 ம் பாதம்: நல்ல முறையில் வருமானமும் சேமிப்பும் உண்டு.
வருடத்தின் பிற்பாதியில் நீங்கள் நினைத்தபடி நிறைய ஆடம்பர பொருட்கள் வீட்டினில் சேரும். அதிகம் பேசுவது ஆபத்தினைத் தரும் என்பதை நீங்கள் உணருவது நல்லது. நம் வீட்டுப் பிரச்னைகளை வெளியில் சொல்வது நல்லதல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். வாக்குவாதம், வாக்குறுதி இரண்டையும் தவிர்ப்பது அவசியம். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் வேறு நாட்டிற்கு மாறுவர்..
நிதி:
சற்று அதிகமாகப் பாடுபட வேண்டியிருந்தாலும் நல்ல முறையில் வருமானமும் சேமிப்பும் உண்டு. ஓடி அலைந்து திரிந்து சம்பாதிப்பீர்கள். பொழுது போக்குகளைக்குறைத்துக் கொண்டு முனைந்து பணம் ஈட்டும் ஆர்வம் வரும். இப்போது சேமிக்கும் பணம் பிற்காலத்தில் நன்கு வளரும். உதவும். சில சேமிப்புகளை முதலீடுகளாக்கிப் பயன்பெறுவீர்கள்.
குடும்பம்:
இடையில் சில மாதங்களுக்குக் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்பட்டுக் களைகட்டும். வயதான பெற்றோர் மூலம் சிறிய அளவில் மருத்துவச் செலவுகள், வந்துபோகும். மனைவி வீட்டில் இருந்து சொத்து, பணம், நகை கிடைக்கும். ‘
கல்வி:
முனைந்து படிக்காமல் சற்று காலவிரயம் ஆகும். எனினும் கடைசி நிமிடத்தில் விட்டதைப் பிடித்துவிடுவீர்கள். கடைசி நிமிடப் பதற்றத்தைத் தவிர்க்க முதலிலிருந்தே முனைந்து படிக்கலாமே? நண்பர்கள் ஒன்றாய் உட்கார்ந்து படித்து உதவுவார்கள்.

பெண்கள்:
உங்கள் பெயரில் அல்லது கணவருடன் இணைந்து சொந்தமாக பிளாட் வாங்குவீர்கள். வைர, நகைகள் வாங்கவேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறும். தாய், தாய்மாமன், தாத்தா, பாட்டி யின், ஆதரவு கிடைக்கும்.
உடல் நிலை:
சிறு உபாதைகளைத் தவிர்க்க முடியாது. ஒருமாதம் போலிருந்தாற்போல் மறுமாதம் இருக்காது. எனினும், கற்பனை பயம் வேண்டாம். மொத்தத்தில் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். கவனமாக வாகனம் ஓட்டுங்கள்.
தொழில்/பணி:
அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் வரும். அது உங்கள் விருப்பத்துக்கேற்றதாக இல்லை என்றாலும் காலப்போக்கில் ரசிப்பீர்கள். “உயர்வு தாமதமாகவே வரும். சில மூத்த அதிகாரிகள் மட்டும் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வேலைச்சுமை கூடும். அதற்கேற்ற வருமானம் பிற்காலத்தில் வரும்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குருவாயூரப்பனை வணங்குங்கள்.

பகிர்க copied
 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar