* உயிர்களைக் கொல்லாதிருப்பதும், புலால் மறுப்பதுமே உண்மையான விரதம். * பணத்தை சேமிக்கும் முன் சிக்கனமாகச் செலவழிக்க பழகுங்கள். * பிறரது குற்றத்தை ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவினர் என யாரும் இருக்க மாட்டார்கள். * பிறர் செய்த தீங்கினை மன்னித்து மறந்து விடுங்கள். * கையில் இருக்கும் பொன்னை விட மேலான செல்வம் கல்வியே. * தேவையிருக்கும் இடத்திற்குச் சென்று உதவுவதே ஆட்சியாளரின் கடமை. * பெற்ற தாயே மேலான தெய்வம். தந்தையின் வழிகாட்டுதலே சிறந்த மந்திரம். * சிறந்த உணவாக இருந்தாலும் காலமறிந்து உண்பது அவசியம். * பணத்தை தேடாமல், கையிருப்பை செலவழித்தால் விளைவு துன்பமே. * நெருங்கிய நண்பனிடம் கூட வறுமையைப் பற்றி பேசாதீர். * மனம் ஒன்றிச் செய்யாத செயல்கள் வெற்றி பெறுவதில்லை. * வேதம் ஓதுவதை விட ஒழுக்கமாக வாழ்வது சிறந்தது. * புலால் சாப்பிடுதல், கொலை, திருட்டு மூன்றுமே கூடாது. * நிதானமாகச் செய்யும் செயல்கள் நன்மையாக முடியும். * உழைத்துச் சேர்த்த செல்வம் ஒருநாளும் வீணாகாது. * உற்சாகத்துடன் செயல்படுவதே முன்னேற்றத்திற்கு அழகு. * தினமும் காலையில் எழுந்ததும் கடவுளை வணங்குங்கள்.