பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
10:04
மனிதனுக்கு கஷ்டத்தில் தவிக்கும் போது, ‘‘இறைவா! எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என் உயிரை எடுத்துக்கொள். ஏன் இவ்வளவு கஷ்டம் தருகிறாய்?’’ என புலம்புவான். குறிப்பாக வயதான காலத்தில் பார்வை குறைபாடு, உடல் சோர்வால் செயல்பட முடியாமல் பலர் அவதிப்படுவர். அவர்கள் விரைவில் மரணம் அடைய வேண்டும் எனக் குடும்பத்தினரே காத்துக் கிடப்பர். மனிதன் மரணத்தைப் பற்றி சிந்திப்பதில் தவறில்லை. அதே நேரம் ஆயுளைக் குறைத்து கொள்ளும் உரிமை அவனுக்கு இல்லை.
வாழும் காலம் – பலன்
40 ஆண்டுகள் – குஷ்டம், பைத்தியம் போன்ற நோய்களில் இருந்து விலக்கு
50 ஆண்டுகள் – மறுமை நாளில் செய்த பாவம் குறித்த கேள்விகள் குறைக்ககப்படும்
60 ஆண்டுகள் – இறைவன் கருணையை பொழிவான்
70 ஆண்டுகள் – மனம் விரும்பியபடி நன்மை சேரும்
80 ஆண்டுகள் – பாவங்கள் கூட நன்மையாக மாறும்
90 ஆண்டுகள் – பாவங்களில் இருந்து முழுவிலக்கு மற்றவருக்காக பிரார்த்தனை செய்தால் வேண்டுதல் நிறைவேறும் எனவே நீண்ட காலம் வாழ ஆசைப்படுங்கள்.