மனம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் ஒரு ஆசிரியர். அதற்காக கண்ணாடி டம்ளர் ஒன்றை கையில் பிடித்தபடி,. ‘‘இது மிக லேசான பொருள் தான். இருந்தாலும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பிடித்தால் கை வலிக்கும். அதுவே பல மணி நேரமானால் கை மரத்துப் போகும். இந்த விஷயம் நம் மனதிற்கும் பொருந்தும். வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பம், பிரச்னை, இழப்பு ஆகியவற்றை மனதிலிருந்து இறக்கி வைக்காவிட்டால் மனம் வலிக்கும். இதுவும் கடந்து போகும் என அவற்றை விட்டு விட்டால் மனம் லேசாகி விடும். மனதை கையாளத் தெரிந்தவனே புத்திசாலி.