வீட்டுக்கு ஒரு நாயை காவலுக்கு வைக்கலாம். பணமுள்ளவர்கள் கூர்க்காவை நியமிக்கலாம். ஆனால் மனிதர்கள் தங்கள் உடம்பில் இருக்கும் இரண்டு எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள யாரை நியமிக்கப் போகிறார்கள். அதில் ஒன்று பேச்சு. மற்றொன்று பாலுணர்வு. கடும் வார்த்தைகளை உதிர்ப்பதன் மூலம் நாக்கு துன்பத்தை வரவழைக்கிறது. இருவர் சண்டையிடும் போது வாக்குவாதம் முற்றுகிறது. தவறான வார்த்தைகள் வெளிப்படும் போது ஒருவருக்கொருவர் தாக்க முயலும் போது உயிர்ச்சேதம் கூட ஏற்படலாம்.
இது பற்றி நாயகம், ‛ மனிதன் சில சமயங்களில் இறைவனுக்கு விருப்பமான நல்ல விஷயங்களை பேசுகிறான். அப்போது இறைவன் அவனது அந்தஸ்தை உயர்த்துகிறான். ஆனால் வெறுப்புடன் பேசும் போது படுகுழியில் விழுகிறான் என்கிறார். பெண்களை தீய நோக்குடன் பார்க்கும் கண்கள் கெட்ட கண்களாகும். அவர்களது அழகை வர்ணித்து பேசுவதும், கேட்பதும் பாவச் செயலாகும். இச் செயல் எல்லை மீறும் போது ஆபத்தாக முடியும். இதனால் மனிதன் நற்பண்புகளை இழக்க நேரிடும். இதிலிருந்து தப்பிக்க இறைவனுக்கு அடிபணிந்து நற்சிந்தனையுடன் வாழ்வது ஒன்றே வழி.
இன்று நோன்பு திறக்கும் நேரம்; மாலை 6;35 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்; அதிகாலை 4: 32 மணி