கோபக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி நாயகம் கூறுவதைக் கேளுங்கள்.
கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே வலிமை வாய்ந்தவன். கோபம் கொள்பவனை இறைவன் விரும்ப மாட்டான். கோபம் சைத்தானின் வெளிப்பாடாகும். சைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். எனவே கோபம் வந்தால் ஒளு செய்து கொள்ள வேண்டும். (தண்ணீரால் சுத்தம் செய்தல்) ஒருவர் நிற்கும் பொழுது கோபம் வந்தால், அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். அப்படியும் குறையாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்கிறார். கோபக்காரர் ஒருவர், எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் என கேட்ட போது “கோபம் கொள்ளாதீர்” என பதிலளித்தார். அந்த மனிதர், மீண்டும் எனக்கு அறிவுரை கூறுங்கள்! என கேட்டுக் கொண்டே இருந்தார். பொறுமையாக ஒவ்வொரு முறையும் நீர் கோபம் கொள்ளாதீர் என்றே பதிலளித்தார். பிறருக்கு அறிவுரை என கூறுவதாக இருந்தால், கோபப்படாதீர்கள் என்ற சொல் முதலாவதாக இருக்கட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்; மாலை 6;29 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்; அதிகாலை 4: 29 மணி