திண்டிவனம் : திண்டிவனம் பெருமாள் கோவில்களில் ராமநவமி உற்சவம் நேற்று சிறப்பாக நடந்தது. ராமநவமியையொட்டி திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் உள்ள ராமருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும் மாலையில் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அதேபோல் , திண்டிவனம் சஞ்சிவிராயன்பேட்டை ராஜாங்குளக்கரையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் கோவில் மூலவருக்கு அபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.