மானாமதுரை சித்திரை திருவிழா துவக்கம் : வீர அழகருக்கு காப்பு கட்டப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2021 12:04
மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி கைகளில் காப்பு கட்டப்பட்டது.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் தினந்தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்,விழாவின் முக்கிய நிகழ்ச்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வர். கடந்தாண்டு கொரோனா தொற்றால் திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு உள் திருவிழாவாக சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று காலை உற்ஸவர் வீர அழகரின் கையில் காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது.விழா நாட்களின் போது சுவாமி கோயிலின் உள்பிரகாரத்திலேயே சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் போன்றவை கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.