பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி சுவாமிக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக பூதேவி ஸ்ரீதேவியுடன் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்தானதால் கோயிலிலேயே வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் இருந்தார்.