கொரோனா நீங்க வேண்டி காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2021 04:04
காரைக்கால்: கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காத்திட வேண்டி, காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில், சுவாதி நட்சத்திரமான நேற்று முன்தினம், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காத்திடவேண்டி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பில் நடந்த இந்த சிறப்பு பூஜை , கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, பக்தர்கள் இன்றி நடை பெற்றது.