சித்ராபவுர்ணமியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, சித்திர குப்தரின் படத்திற்கு அல்லது திருவிளக்கின் முன் மலரிட்டு வழிபடுவது நன்மை தரும். பானகம், நீர் மோர், வெல்லம் சேர்த்த அவல் பிரசாதமாகப் படைத்து அவசியம். சித்ரகுப்தர் பசுவின் வயிற்றில் இருந்து அவதரித்தவர் என்பதால், உணவில் பசும்பால், தயிர், வெண்ணெய், நெய்யைச் சேர்ப்பது கூடாது. உப்பை அறவே தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. விரதமிருப்போருக்கு ஆரோக்கியம், செல்வ வளம், நிறைந்த புகழ் உண்டாகும். ஏழைகளுக்கு சித்திர வேலைப்பாடு கொண்ட வஸ்திரம் (துணி) தானம் அளித்தால் எண்ணியது எளிதில் நிறைவேறும்.