தர்மம் செய்தால் பணம் குறையுமே! கஷ்டப்பட நேரிடுமே என பலரும் சந்தேகம் கொள்கின்றனர். ஆனால் தர்மம் செய்வதால் பணம் குறைவதில்லை என்கிறார் நாயகம். அதனால் தான் ஆண்டுக்கு ஒருமுறையாவது தர்மம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஜகாத் வகுக்கப்பட்டுள்ளது.
நபித் தோழர் ஒருவர், ஒரு மனிதன் ஜகாத் கொடுத்தால் அவருக்கு என்ன நன்மை கிடைக்கும்? எனக் கேட்டார். ஜகாத் மூலம் ஒருவரின் சொத்தில் உள்ள தீமை எல்லாம் அகன்று விடும் என்றார். ஒருமுறை மட்டும் ஜகாத் கொடுத்தால் போதாதா என சிலர் நினைக்கின்றனர். இது தவறு. இதன் மூலம் சொத்து அபிவிருத்தியாகும். இறையருள் கிடைக்கும். மேலும் சொத்து சேர இறைவனே வழிகாட்டுவான். இயன்ற போதெல்லாம் தர்மம் செய்து இறைவனின் கருணைக்கு ஆளாவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:24 மணி.