பதிவு செய்த நாள்
30
ஏப்
2021
06:04
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் ராஜ கணபதி, சக்திமாரியம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் ராஜகணபதி, சக்திமாரியம்மன், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமி மற்றும் நவக்கிரக சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மங்கல இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு கடம் புறப்பட்டு 8.15 மணிக்கு ராஜ கணபதி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 8.30 மணிக்கு வள்ளி தெய்வாணை உடனுறை சுப்பிரமணிய சுவாமி மற்றும் நவக்கிரகங்களுக்கும் 8.50 மணிக்கு சக்தி மாரியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். இதில் திரளாக பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.