தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பாக 1800 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2021 10:05
தஞ்சாவூர், நலிவுற்ற 1800 குடும்பங்களுக்கு இந்த சேவை நடைபெற உள்ளது. கொரோனா தேவியின் கோரமான ஆட்டம் மக்களை வாட்டி எடுக்கிறது. வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டவர்களுள் நாட்டுப்புறக் கலைஞர்களின் துன்பம் மிக அதிகம். கடந்த ஒரு வருடமாக எந்தவித நிகழ்ச்சியும் இல்லாததால் அவர்கள் வறிய நிலைக்கே சென்று விட்டார்கள். அந்த மக்களின் துயரத்தைச் சிறிதளவாவது குறைப்பதற்காக தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களின் நலிவுற்ற கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ 1000/- செலவில் மளிகை பொருட்களை ஸ்ரீராமகிருஷ்ண மடம் விரைவில் வழங்க இருக்கிறது. இதற்கான முழு நிதி உதவி ZOHO சாஃப்ட்வேர் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கொரானா நிவாரண பணிக்கான முதல் ஆயத்தக்கூட்டம் இன்று மே 1-ம் தேதி தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது.