பதிவு செய்த நாள்
05
மே
2021
06:05
ஆர்.கே.பேட்டை : கோடையின் உக்கிரம், சித்திரை மாதத்தில் உச்சத்தை எட்டும் நிலையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காக்கும் பொருட்டு, கங்கையம்மனுக்கு ஜாத்திரை கொண்டாடப்படுவது வழக்கம்.
நேற்று, ஆர்.கே.பேட்டையில், கங்கையம்மன் ஜாத்திரை கொண்டாடப்பட்டது. பொன்னியம்மன் கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும், அண்ணா நகர் பகுதியில், தனியாக கங்கையம்மன் திருவிழா நடத்தப்பட்டது.கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தடியில், கங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். மேலும், பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனாக, மாறுவேடம் அணிந்து, வலம் வந்தனர்.