சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் மருத்துவ குணம் கொண்ட ஈச்சம் பழங்கள் அதிகம் விளைந்துள்ளது. இபகுதியில் ஆற்றங்கரை, தோப்பு உள்ளிட்ட மணல்பாங்கான இடங்களில் ஈச்சம் செடிகளில் காய்கள் கொத்தாக காய்த்துள்ளன. உவர்ப்பு சுவையுடைய இக்காய்கள் உடல் சூட்டை தணிக்கக்கூடியது என்பதால் மக்கள் பறித்து சாப்பிடுகின்றனர். விவசாயிகள் பலர் இக்காய்களை பறித்து வீடு வீடாக கொண்டு சென்று விற்கின்றனர். பழமாக மாறுவதற்கு முன்பாகவே காய்களை மருத்துவ தேவைக்காக மக்கள் பறித்துச்சென்றுவிடுவர். இச்செடிகளுக்குள் சித்தர்கள் வாசம் செய்வர் என்பது ஆன்மிக வாதிகளின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.