பதிவு செய்த நாள்
10
மே
2021
02:05
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், உற்சவர் புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் கோவிலை வலம் வந்தார்.இதே போன்று, கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.அனைத்து கோவில்களிலும் கொரோனா கட்டுபாடு காரணமாக பக்தர்கள் வருகையைத் தவிர்க்க வழக்கமாக மாலையில் நடைபெறும் பூஜை காலையில் நடந்து முடிந்தது.
விருத்தாசலம்மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வர் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. அதேபோல் சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. நடுவீரப்பட்டுசி.என்.பாளையம் மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் பிரதோஷ பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு விநாயகர், பிரதோஷ நாயகர், ஈஸ்வரர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரதோஷநாயகர் ஆலய உலா வந்து அருள்பாலித்தார்.