ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சப்தாவரணம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2021 11:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேர்த் திருவிழாவில், சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பெரிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமாக நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகின்றன. கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் 10ம் நாளான நேற்று சப்தாவரணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார். அத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.