பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கொரோனா நோய் நீங்கி உலக மக்கள் நலம் பெற, ஒரு லட்சம் மகாமந்திரம் வேள்வி, மலர் அர்ச்சனை நடக்கிறது.தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊரடங்கு நடைமுறையும் அமல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், கொரோனா கொடிய நோய் நீங்கவும்; உலக மக்கள் நலம் பெற்று வாழவும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், அருட்பிரகாச வள்ளல் பெருமானையும் வேண்டி, லட்சம் மகா மந்திரம் வேள்வி மலர் அர்ச்சனை நடக்கிறது. சமத்துார் சத்திய ஞான சபையில் நேற்று துவங்கியது. வேள்வியில் மந்திரம் பாராயணம் செய்யப்பட்டு வேண்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து ஒருவாரம் நடக்கிறது.