பொறுமையும், நன்றியுணர்வும் இறை நம்பிக்கையாளரிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள். இன்பம், துன்பம் என எது ஏற்பட்டாலும் நன்மையே என்ற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்படுவர். மகிழ்ச்சியின் போது நன்றி தெரிவிப்பதோடு துன்பத்திலும் மனம் தளராமல் இறைவனை பிரார்த்திப்பர்.
இறைவனை எஜமானராகவும், தங்களைப் பணியாளராகவும் கருதிச் செயல்படுவர். நற்செயல்களில் மட்டுமே ஈடுபட்டு சமுதாயத்தில் நல்லவர் என்னும் மதிப்புடன் வாழ்வர். என்னை பொறுமைசாலியாக்கு! நன்றி அதிகம் செலுத்துபவனாக்கு. என்னுடைய பார்வையில் தாழ்ந்தவனாகவும், மற்றவர்கள் பார்வையில் உயர்ந்தவனாகவும் இருக்கச் செய் என இவர்கள் எப்போதும் பிரார்த்திப்பர். எனவே பொறுமை, நன்றியுணர்வு நமக்கு தேவை
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:28 மணி.