வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா: மே 18ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2021 11:05
விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா மே 18ல் கொடியேற்றுடன் துவங்குகிறது.
பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலுக்கு அடுத்தபடியாக மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும்விழாக்களில் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கலும் ஒன்று. தற்போது ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கோயில் வளாகத்தில் வைத்தே பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இன்றி மே 18ல் கொடியேற்றம், 25ல் பொங்கல் விழா நடக்கிறது. கொரோனா தொற்றால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி இல்லை என விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.