Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... 17ம் நூற்றாண்டு வில்வீரன் நடுக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றி, நிம்மதி தரும் வாராஹி வழிபாடு
எழுத்தின் அளவு:
வெற்றி, நிம்மதி தரும் வாராஹி வழிபாடு

பதிவு செய்த நாள்

18 மே
2021
06:05

சப்தமாதர்களில் ஒரு தேவதை வாராஹி தேவி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில், சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள். பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால், வெற்றிக்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இல்லை என்பது முன்னோர் சொல்.

உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவி
உன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவி
ஜெய ஜெய மங்கள காளி பைரவி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1)

தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவி
விசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2)
 
தருணத்தில் வருபவள் குணமிகு தாயவள்
தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளே
ஜெய ஜெய மங்கள காளி பைரவி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (3)

மாபெரும் சக்தி மஹா வாராஹி மங்கள செல்வி
சியமாள ரூபணி சிங்கார ரூபிணி வாராஹ ரூபிணி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (4)
 
எண்ணிய பேரை காப்பவளே கற்பகமே
வாட்டம் போக்கும் நாயகி வாராஹி தேவி வார்த்தாளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (5)
 
ஆண்டவளே எம்மை ஆள்பவளே அகிலாண்ட நாயகியே
கண்டத்தில் நின்று கருனையும் கொண்டு காப்பவளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (6)
 
அனுதினம் உன்னை அண்டியே வந்தோம்
அணுவுக்குள் அணுவாக திகழ்பவளே வார்த்தாளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (7)

தேடி வந்தால் ஓடி வருபவள் தேவை அனைத்தையும் தருபவளே
பாடியே வந்தோம் பாவங்கள் போக்கி சாபங்கள் போக்கிட வேண்டும் அம்மா
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (8)

அற்புத ரூபிணி கற்பக சங்கரி பொற்பாதம் சரணம் அம்மா
நற்பலன் யாவும் தந்திடும் நாயகி பரிபூரணி அம்பிகையே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (9)
 
ஊசி முனையில் தவம் செய்யும் காமகோடி பீடமே
கம்பா நதியில் சிவனை வேண்டி பூஜித்த காமாட்சி உமையே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (10)
 
காலனை உதைத்து மஹா சிவனின் அன்புக்கு உரியவளே
பட்டர் பாட்டுக்கு பணிந்த வந்த பயங்கரி எங்கள் அபிராமி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (11)

அழகியே கண்கள் ஆணந்தமே அதுவே போதும் அம்மா உந்தன் பேரழகே
சிங்கத்தின் மீது அமர்ந்து வருபவளே அந்த சிவனாரின் பத்தினியே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (12)

 வந்திடும் துன்பத்தை தூர ஓட்டும் தூயவள் மஹா தூர்க்கையே
தந்திடும் செல்வத்தை கொடுப்பவளே எங்கள் அம்பிகையே ஸ்ரீதேவி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (13)

 சிம்ம முகத்துடன் சிவந்த கரத்துடன் அருள் புரிபவளே
நரசிம்மர் பாச தங்கை ப்ரத்தியங்கிர தேவி பயங்கரி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி (14)

சிரிக்கும் பேரிழகி சிவந்த முகத்தழகி மாரியம்மா
வடக்கு நோக்கியே அமர்ந்த சக்தியே சமயபுரத்தாளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (15)
 
மூன்று கடல் சங்கமிக்கும் அந்த கரையிலே
மூன்று கண்களுடன் அருள் புரிந்திடும் குமரியம்மா
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (16)

எத்தனை எத்தனை கோலம் அம்மா எடுத்தவளே வாராஹி
அத்தனை ரூபத்தில் உன் அருள் முகம் கண்டோம் வார்த்தாளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (17)
 
புற்றினிலே பெரும் சர்ப்பமாக வலமாக வருபவளே
தண்ட காருண்யம் என்னும் தலத்திலே சதிராடும் எங்கள் அங்காளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (18)

தேடிய ஞானமே நீ தானம்மா திருவடியில் இடம் வேண்டுமம்மா
பாடிய பக்தரை காத்திட உனைவிட்டால் யாரம்மா
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (19)

 கருவை காத்தவளே கரு மாரி அம்பிகையே சீதாள தேவி திருமளே
திருவேற்காட்டிலே திருவழகுடனே கதியென வருபவர்களை காப்பவளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (20)

பாடிய கீர்த்தனை ஏற்றிட வேண்டும் எங்கள் அம்பிகையே
தேடிய வரத்தை தந்திட வேண்டும் திருவழகே வாராஹ
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திருசூலி (21)
 
அன்னை வாராஹி ஸ்தோத்திரம் பரிபூரணம்
மங்களம் பரிபூரணமே எம் அன்னை வாராஹி பார்வையிலே...!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோமவார விரதம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்கபடுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆதிரெத்தினேஸ்வரருக்கு 108 வகையான மூலிகைகளால் ... மேலும்
 
temple news
கோவை; ராம்நகர், கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு கார்த்திகை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar