கோவை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, உடையாம்பாளையத்தில் வீடுகள் முன் மாட்டு சாணம், கோமியம், மஞ்சள், வேப்பிலை கலவை தெளிக்கப்பட்டு வருகிறது.
உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீரும், தினமும் வழங்கப்படுகிறது.நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உடையாம்பாளையம் பகுதியில் வேப்பிலை தோரணங்கள் கட்டியும், மாட்டு சாணம், கோமியம், மஞ்சள், வேப்பிலை கலந்து, வீட்டு வாசல்களில் தெளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியினரிடம் நோய் பரவல் தடுப்புவிழிப்புணர்வும், ஏற்படுத்தப்பட்டு வருகிறது.