பதிவு செய்த நாள்
28
மே
2021
02:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் சார்பில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சாலையோரம் வசிப்பவர்கள் என, தினமும் 750 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.கொரோனா தொற்றால் கடந்த ஏப்., 19ம் தேதி முதல், திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிஇல்லை.இதனால், பக்தர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, திருத்தணியில் உள்ள ஏழைகள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு வழங்கி வந்தனர்.தற்போது, திருத்தணி அரசு மருத்துவமனை மற்றும் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் உள்நோயாளிகளாக தங்கியிருப்பவர்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும், கோவில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. இது தவிர ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பழைய தர்மராஜா கோவில் வளாகத்தில் தங்கியுள்ளவர்களுக்கு, வேன் மூலம் ஊழியர்கள் உணவு பொட்டலம் வழங்குகின்றனர்.இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் வரை, தொடர்ந்து மருத்துவமனை மற்றும் ஏழைகள் என, தினசரி 750 பேருக்கு உணவு வழங்கப்படும் என்றார்.