கொரோனா சங்கடம் தீர வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை
பதிவு செய்த நாள்
31
மே 2021 10:05
வீரபாண்டி: கொரோனா சங்கடம் தீர வேண்டி, விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில், உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கோபுர விநாயகர், கருவறை எதிரே இரட்டை விநாயகர், அரசமரத்து பிள்ளையார் என, அனைத்து விநாயகர் சிலைகளுக்கும், நேற்று சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, கொரோனா சங்கடம் தீர பூஜை நடந்தது. அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்கும், ஆட்டையாம்பட்டி, கை.புதூர், ராஜகணபதி கோவில் மூலவருக்கு, சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. அரியானூர், மகா கணபதி கோவிலில், விநாயகர், அவரது வாகனமான மூஞ்சூறு ஆகியவற்றுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அதேபோல், ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், உலக நன்மை, கொரோனா நீங்க வேண்டி பூஜை நடந்தது. மூலவர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
|