ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் 1,700 பேருக்கு நிவாரணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2021 09:05
தஞ்சாவூர்: ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் 800 பேர், முடி திருத்துவோர் 300 பேர் தினக்கூலி தொழிலாளர்கள் 300 பேர், ஆட்டோ ஓட்டுனர்கள் 300 பேர் என மொத்தம் ஆயிரத்து 700 பேருக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா இன்று 30.5.21 நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், போலீஸ் எஸ்பி தேஷ்முக் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.