பதிவு செய்த நாள்
12
ஜூன்
2021
11:06
ஜம்மு:ஜம்மு - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் அருகே, புராணத்தை அடிப்படையாக வைத்து, மிகச் சிறந்த, தீம் பார்க் அமைக்க, யூனியன் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும், ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். இதையடுத்து, கோவிலின் அருகே புராண அடிப்படையில் தீம் பார்க் அமைக்க, யூனியன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கோவிலின் அருகே புராணம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு அடிப்படையிலான தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளோம். திட்டத்தில் பங்கேற்க, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த தீம் பார்க்கில் உணவகம், தங்குமிடம், சாகச விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு, கலை உட்பட அனைத்தும் இடம் பெறும்.இதில் முதலீடு செய்வோருக்கு, மத்திய மற்றும் ஜம்மு - காஷ்மீர் அரசுகளின் சார்பில், வரி விலக்கு, ஊக்கத்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.