Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : ஆனி ராசிபலன் துலாம் : ஆனி ராசிபலன் துலாம் : ஆனி ராசிபலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கன்னி : ஆனி ராசிபலன்
எழுத்தின் அளவு:
கன்னி : ஆனி ராசிபலன்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
07:06

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொண்டு காரிய வெற்றி பெறும் திறமையுள்ள உத்திர நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் நல்ல பலன்கள் வரும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் வேகம் ஏற்படும்..
சந்திராஷ்டமம்: ஜூலை 03, 04
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 17, 18

வணங்க வேண்டிய தெய்வம்: ஐயப்பனை பிரார்த்தனை செய்தால் ஆரோக்கியத்தில் மேம்பாடு கிட்டும்

ஹஸ்தம்:
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் குணமுடைய ஹஸ்த நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 04, 05
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 18, 19

வணங்க வேண்டிய தெய்வம்: ப்ரத்யங்கிரா தேவியை துதிக்க வழக்குகளில் வெற்றி கிடைக்கும்

சித்திரை 1, 2, பாதங்கள்:
எவ்வளவு வேலை என்றாலும் சளைக்காமல் அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற சித்திரை நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 05, 06
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 19, 20


வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar