காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தலில் 500 ஆண்டுகள் பழமையான பெரிய நாகலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, இன்று 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. ராகு-கேது பரிகார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ தவத்திரு சிவகிரி மகரிஷி சுவாமிகள் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு புனிதநீர் தெளித்தனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.