ஒருமுறை நாயகம் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில் தெரிந்தவர் ஒருவர் அவசரமாகப் போய் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், ‘‘அண்ணலாரே! உடல்பலம் மிக்க இவர் தனது வலிமையை நற்செயல்களுக்காக பயன்படுத்தினால் அது அவருக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கே பயனளிக்கும் அல்லவா...’’என்றனர். ‘‘தோழர்களே! அவர் தன் குழந்தையின் தேவைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்ல வழி. பெற்றோருக்கு உதவிபுரிய கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் நல்லதே. ஆதரவற்ற முதியவர்களுக்காக உதவ செல்கிறார் என்றால் அது சீரியவழி. தீயபண்புகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றால் அதுவும் நன்மைக்கே. ஆனால் ஆடம்பரம், தற்பெருமை, புகழுக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழியாகும்” என்றார்.