திருப்பதியில் வெங்கடாசலபதி கோயிலுக்கு வலது பக்கத்தில் உள்ள தெப்பக்குளம் சுவாமி புஷ்கரணி எனப்படும். சுமார் 1.5 ஏக்கர் பரப்புள்ளது. இந்த திருக்குளம் தமிழில் திருக்கோனேரி எனப்படுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு தெய்வத்தன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்துக்கு சுவாமி தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. இதை வைகுண்டத்தில் இருந்து கருட பகவான் கொண்டு வந்து, விஷ்ணு நீராடுவதற்காக நிறுவினார் என்று சொல்வர். இலங்கை செல்லும் வழியில் இந்த தீர்த்தத்தில் நீராடி சென்றுள்ளார் ராமன். இத்தீர்த்தத்தில் மார்கழி துவாதசி அன்று மூன்று கோடி பவித்ர தீர்த்தங்கள் கலப்பதாக ஐதீகம். அன்று காலை விஷ்ணுவின் சக்கரமான சுதர்சனம் திருவீதிகளில் எழுந்தருளும், அத்துடன் சுவாமி தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடக்கும்.