குறைவில்லாமல் பூரணத்துவம் பெற்று நீடுழி வாழ்க என்று தம்பதியரை வாழ்த்தும்போது, அட்சதையை பயன்படுத்துகிறோம். முனைமுறியாத பச்சரிசியும், மஞ்சள்பொடியும் கலந்த மங்கலப்பொருள் தான் அட்சதை. க்ஷதம் என்றால் குறைவுடையது என்று பொருள். இவ்வார்த்தையுடன் அவை சேர்த்தால் குறைவில்லாதது என்று பொருள்படும். அதாவது நிறைவுடையது, பூரணத்துவம் உடையது என்பதாகும்.