திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்குப்பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு ருத்ராட்ச அலங்காரமாகி சுவாமி முன் 2 ஆயிரம் மாம்பழம், 5 ஆயிரம் பலாசுளைகள், 3 ஆயிரம் வாழைப் பழங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சொக்கநாதருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.