பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
06:06
பெ.நா.பாளையம்: கோவிட் தொற்று குறைந்து வருவதால், கோவில்களைத் திறந்து இறைவனை வழிபட, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, இந்து முன்னணியினர், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் கோவில்கள் முன்பு, கற்பூரம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.
துடியலூர் விநாயகர் கோவில் முன்பு, கற்பூரம் ஏற்றி போராட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பொதுச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 10க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர். இதேபோல, உருமாண்டாம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இந்துமுன்னணி கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமையிலும், கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சரவணன் தலைமையிலும், வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் முருகன் திவாகர் தலைமையிலும் கோவிலை திறக்க கோரி, கற்பூரம் ஏற்றி போராட்டம் நடந்தது.