பதிவு செய்த நாள்
19
ஜூன்
2012
10:06
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தெப்பக்குளம், பல ஆண்டுகளுக்கு பின் தூர் வாரப்பட்டது. சேலத்தில், புராண சிறப்பு மிக்க சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுகவனேஸ்வரர் கோவிலில், தெப்பக்குளம் நடுவில் நால்கால் மண்டபம் உள்ளது. கார்த்திகை தீபத்தின் போது, பெண்கள் திரளாக வந்து, வாழை மட்டையில் தீபம் ஏற்றி, தெப்பக்குளத்தில் விட்டு, இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தெப்பக்குளத்தை சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால், தண்ணீர் இன்றி வறண்டு, சுகாதார சீர்கேட்டுடன் காட்சி அளித்தது. பல ஆண்டுகளாக பக்தர்களின் பயன்பாடின்றி தெப்பக்குளம் இருந்து வந்தது. தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் குரல் கொடுத்தும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். கோவில் தெப்பக்குளத்தை பக்தர்களே முன்வந்து தூய்மை செய்யும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டனர்.