ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை மாதம் அமாவாசை வரை ஒரு மாதம் முழுவதும் (அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் அமாவாசை வரையுள்ள சாந்திரமான மாதம் இங்கு கணக்கிடப்பட்டுள்ளது) முப்பது நாட்களும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகே வீதியில் உயரமான ஒரு ஸ்தம்பம் (கம்பு) நட்டு அதன் நுனியில் எட்டு திரியுடன் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அல்லது தனது விட்டு மொட்டைமாடி போன்ற உயரமான இடத்தி<லும் தீபமேற்றலாம். இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். அமாவாசைக்கு அடுத்த நாள் மாலையில் சூரியன் மறைந்தபின்,
அஹம் ஸகல பாப க்ஷய பூர்வகம் ஸ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தானம் கரிஷ்யே
என்று சுவாமி சன்னதியில் சங்கல்பம் செய்து கொண்டு, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு. 8 திரி போட்டு ஏற்றி அருகிலுள்ள ஆலயத்திலோ, தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில்,
என்னும் ஸ்லோகம் சொல்லி தீபத்தை வைத்து நமஸ்காரம் செய்யலாம். இவ்வாறு மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்களாவது, அல்லது ஒரு நாளாவது அருகிலுள்ள மஹாவிஷ்ணு கோயில் சென்று இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து நமஸ்கரிக்கலாம். இதனால் அனைத்துத் துன்பங்களும் குறிப்பாக அனைத்துக் கடன்களும் விலகும். லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.