எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான். ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும் உடையும் தருபவன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகிறான். நம்பிக்கையோடும், நம்பிக்கை இல்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான். ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு <உரைத்ததாக ஸ்ரீமத் தேவி பாகவதம் கூறுகிறது.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில் அவன் இறந்தபின் ருத்ரலோகத்தை அடைகிறான். இந்தக் கலியுகத்தில், ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும், தேவையில்லாமல் மிரட்டவுமே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், பல நுõறு பிறவிகளில் பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே இந்தப் பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.