பதிவு செய்த நாள்
19
ஜூன்
2012
11:06
புளியரை: இலத்தூர் சங்கரவிநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இலத்தூர் சங்கரவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக விழாவில் அதிமுக பஞ்.,செயலாளர் சீதாராமன், யூனியன் சேர்மன் எல்ஐசி முருகையா, மதிமுக இலத்தூர் செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் பரமசிவன், பணிநிறைவு ஆசிரியர் வீரபுத்திரன், அழகுநாச்சியம்மன் லோடு ஆட்டோ சங்கரன், எம்.எஸ்.ஏஜன்ஸி தங்கப்பாண்டியன், அதிமுக இலத்தூர் துணை செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரன், முத்துலட்சுமி சவுண்ட்ஸ் சர்வீஸ் இசக்கி, பக்தர் குழு துணைத் தலைவர் வெண்ணிலிங்க ஆசாரி, செயலாளர் சங்கரசுப்பு, கிருஷ்ணன், சுப்பையா முதலியார், மாரியப்பன் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சங்கரவிநாயகர் பக்தர் குழு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.