பதிவு செய்த நாள்
19
ஜூன்
2012
11:06
பாவூர்சத்திரம்: ஆவுடையானூர் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (19ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.ஆவுடையானூர் சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (19ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 2ம் நாள் காலை 9 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கஜ பூஜை, பிரம்மச்சாரி பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, பலிகா ஸ்தாபனம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, ஸபர்சாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. 3ம் நாள் காலை 9 மணிக்கு கடம்புறப்பாடு, 9.15 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு மூலவர் சித்தி விநாயகர், நவக்கிரஹங்கள் கும்பாபிஷேகம், 10 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருமலைக்கோயில் அர்ச்சகர் துரைபட்டர் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியார் செய்துள்ளனர்.