பழநி : பழநி மலைக் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து நேற்று கோயில் இணை ஆணையர் நடராஜன், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், அப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.பக்தர்கள் வருகையின் போது கழிப்பிடம், குடிநீர் வசதிகள், வழிகாட்டுதலை கடைபிடிக்கும் வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கோயில் உட்பிரகார பகுதிகளில் மின் இணைப்புகளை சரி செய்ய உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.