மீனாட்சி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2021 10:07
மதுரை : கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைவதை தொடர்ந்து இன்று முதல் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். பொது தரிசனத்திற்கு செல்வோர் அம்மன் சன்னதி கிழக்கு நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படுவர். ரூ.100, ரூ.50 கட்டண தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். மேற்கு, வடக்கு கோபுரங்கள் வழியாக செல்ல அனுமதியில்லை. முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்குட்பட்டவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.சளி, காய்ச்சல் இருந்தாலும் வருவதை தவிர்க்க வேண்டும். காலபூஜைகள், அபிேஷகங்களை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் உட்காரவும் அனுமதியில்லை. அர்ச்சனை கிடையாது. தேங்காய், பழம் கொண்டு வரக்கூடாது. பக்தர்களுக்கு வழக்கம் போல் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.