சதுரகிரியில் கனமழை: இன்று பக்தர்களுக்கு அனுமதி ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2021 09:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் இரவு பெய்த கனமழையால் இன்று அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் 8 30 மணி வரை சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து, ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம், வனத்துறை, போலீஸ் மாவட்ட நிர்வாகம் ஆலோசனைக்கு பிறகு, இன்று ஆனி மாத அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். முன்னதாக நேற்று மலையேறிய பக்தர்களில் 150 பேர் கோவிலில் தங்கி இருந்ததால், அவர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. கோயில் மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு வனத்துறை, போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.