பதிவு செய்த நாள்
13
ஜூலை
2021
12:07
சென்னை: சென்னையில், இஸ்கான் சார்பில் ஜெகன்நாத ரத யாத்திரை நேற்று நடந்தது. ஜெகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோர் ரதத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஒடிசா மாநிலம் புரியில் ஆண்டுதோறும், ஜெகன்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இஸ்கான் என அழைக்கப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும், சென்னையிலும் ஜெகன்நாத ரத யாத்திரை நடத்தப்படுகிறது. கடந்தஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக, இவ்விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று மாலை, ஜெகன்நாதர் ரத யாத்திரை நடந்தது. விழாவில், இஸ்கான் கோவில் உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.