ஸ்ரீரங்கம் கோவில் தங்கும் விடுதி கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2021 05:07
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்க்கு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி ஒரே நாளில் சுமார் ஆயிரம் நபர்கள் வகையில் உள்ளது , கொரானோ தொற்று பரவல் காரணமாக சுமார் 72 நாட்கள் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது , கடந்த மே , ஜுன் மாதங்களில் கொரானா தொற்று அதிகம் இருந்த நேரத்தில் கொரானா அறிகுறி அற்ற நோய் தொற்றாளர்க்கு கொரானா சிகிச்சை மையமாக செயல்படுத்த திருச்சிராபள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் யாத்திரி நிவாஸ் வளாகம் எடுத்துக் கொள்ளப்பட்டது , தற்போது கொரானோ தொற்று வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் கடந்த 10.07.2021 அன்றுயாத்திரி நிவாஸ் வளாகத்தை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளித்து மீண்டும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் , இதை அடுத்து கோயில் நிர்வாகம் கூடுதலாக அங்கு ஒவ்வொரு அறைகளாக இணை ஆணையர் செ.மாரிமுத்து அறிவுரைப்படி அவர் முன்னிலையில் சோப் ஆயில் மூலம் நன்கு கழுவி , அதன்பின்பு கிருமி நாசினி தொளித்து சுத்தம் செய்தனர், அதன் பின் தினசரி யாத்திரி நிவாஸ் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது ,வருகிற 23.07.2021 அன்று தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டு 24.07.2021 முதல் தங்குவதற்கு இணைய தளம் மூலம் முன்பதிவு நாளை 13.07.2021 முதல் செய்யலாம் என்று இணை ஆணையர் செ .மாரிமுத்து தெரிவித்தார் .